10 கோடி குழந்தைகள் பயன்பெறும் புதிய மென்பொருளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த முடிவு


10 கோடி குழந்தைகள் பயன்பெறும் புதிய மென்பொருளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த முடிவு
x
தினத்தந்தி 25 Jun 2018 1:51 PM GMT (Updated: 25 Jun 2018 1:51 PM GMT)

10 கோடி குழந்தைகள் பயன்பெறும் ஊட்டச்சத்து கண்காணிப்பு மென்பொருளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார், பீகார், ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 57 மாவட்டங்களில் கடந்த மே மாதத்தில் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்கான சேவை என்ற பெயரிலான இந்த மென்பொருள் ஆனது, ஒவ்வொரு கிராமத்தின் ஊட்டச்சத்து பட்டியலை நிரந்தர அடிப்படையில் பெறுவதற்கு உதவவும் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய பிரச்னைகளை ஆய்வு செய்வதனை இலக்காகவும் கொண்டு செயல்படும்.

இதுபற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சகத்தின் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மென்பொருள் கொண்டு செல்லப்படும்.  அதில் குழந்தைகளின் தகவல்களை ஆப்லைன் முறையில் அங்கன்வாடி மையங்கள் பதிவு செய்து கொள்ள முடியும் என கூறினார்.

வருகிற 2020ம் ஆண்டில் அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 718 மாவட்டங்கள் பல கட்ட முறையில் ஒன்றிணைக்கப்படும்.

இதனால் 2022ம் ஆண்டிற்குள் 6 வயது வரையிலான ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையை 38.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதத்திற்கு குறைப்பது என்ற இலக்கு எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.


Next Story