வானிலை சீரடைந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது


வானிலை சீரடைந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 1 July 2018 11:30 PM GMT (Updated: 1 July 2018 10:17 PM GMT)

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

அமர்நாத் யாத்திரை தொடங்கியதை அடுத்து பாகல்கம் மற்றும் பல்தால் ஆகிய வழித்தடங்களில் வழியே பக்தர்கள் பல்வேறு குழுக்களாக அமர்நாத் கோவிலுக்கு சென்று வருகின்றனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கண்ட வழித்தட பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த காரணங்களால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் பாகல்கம், பல்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அதில் சுமார் 587 பக்தர்கள் மட்டும் ஹெலிகாப்டர் மூலம் குகைக்கோவிலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வானிலை சீரடைந்ததை தொடர்ந்து பகவதி நகர் முகாம்களில் தங்கி இருந்த சுமார் 6,877 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.


Next Story