உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி


உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
x
தினத்தந்தி 5 July 2018 10:27 AM GMT (Updated: 5 July 2018 10:27 AM GMT)

நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal

புதுடெல்லி,

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  டெல்லி கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது, அவர் மந்திரிசபை அறிவுரைபடிதான் செயல்பட முடியும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இது குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் செய்தியார்களிடம் கூறியதாவது:

நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். நிலம் மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர்த்து, பிற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்கிற அதிகாரம் டெல்லி அரசுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story