இஸ்லாமிய இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்று சிறை சென்று திரும்பியவர்களுக்கு மத்திய மந்திரி மரியாதை


இஸ்லாமிய இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்று சிறை சென்று திரும்பியவர்களுக்கு மத்திய மந்திரி மரியாதை
x
தினத்தந்தி 6 July 2018 2:56 PM GMT (Updated: 6 July 2018 2:56 PM GMT)

இஸ்லாமிய இறைச்சி வியாபாரியை அடுத்துக் கொன்று சிறை சென்று ஜாமீனில் திரும்பியவர்களுக்கு மத்திய மந்திரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது சர்ச்சையாகியுள்ளது.



ராய்பூர்,


ஜார்கண்ட் மாநிலம் ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த வருடம் ஜூன் 27-ம் தேதி அல்முதீன் அன்சாரி என்ற இறைச்சி வியாபாரி பட்டப்பகலில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிறப்பு கோர்ட்டு இவ்வழக்கில் மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை விதித்தது.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் 8 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளுக்கு மத்திய மந்திரியாக உள்ள பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார். இச்சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜெயந்த் சின்ஹா ஹாசாரிபாக் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.  கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் “இதுபோன்று கும்பல் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மதிப்பளிப்பது என்பது மிகவு மோசமானது. இதுதான் பா.ஜனதாவின் உண்மையான முகம். அவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும். அதற்காக எந்தஒரு எல்லையையும் தாண்ட பா.ஜனதா தலைவர்கள் தயங்கமாட்டார்கள்,” என கூறியுள்ளது.

Next Story