தேசிய செய்திகள்

கிரிக்கெட் வீரர் தோனிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து + "||" + Happy Birthday to M S Dhoni RahulGandhi

கிரிக்கெட் வீரர் தோனிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் தோனிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
கிரிக்கெட் வீரர் தோனிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MSDhoni #RahulGandhi
புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி, தனது திறமையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றி கேப்டன் தோனி. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். 

இந்தநிலையில்,  இன்று தனது 37 வது பிறந்த நாளை தோனி தனது மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை  கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல், டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கூல் கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி, நல்ல உடல்நலம் மற்றும் வெற்றி வருங்காலங்களில் தொடர வாழ்த்துக்கள். என டுவிட்டரில் அதில் குறிப்பிட்டுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...