சத்தீஷ்கார் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி


சத்தீஷ்கார் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 9:43 PM GMT)

சத்தீஷ்கார் அரசுக்கு எதிராக மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

ராய்ப்பூர், 

சத்தீஷ்காரில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பா.ஜனதா ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. இதில் ஊழல், சட்டம் ஒழுங்கு நிலவரம், மாநில மந்திரி ஒருவரின் செக்ஸ் சி.டி. விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் மீது நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. சுமார் 14 மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த விவாதம் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ராமன் சிங் அரசுக்கு பெருவாரியான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.

முன்னதாக இந்த தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்-மந்திரி ராமன் சிங், காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனக்கூறிய அவர், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட காங்கிரஸ் தவறிவிட்டது எனவும் தெரிவித்தார்

Next Story