அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண் பக்தர் மாரடைப்பில் பலி


அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண் பக்தர் மாரடைப்பில் பலி
x
தினத்தந்தி 8 July 2018 7:19 AM GMT (Updated: 8 July 2018 7:19 AM GMT)

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண் பக்தர் மாரடைப்பில் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் யாத்திரை மேற்கொள்வர். கடந்த ஆண்டு இந்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இந்த ஆண்டு யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்ரீகர்களின் வாகனங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 28-ம் தேதி துவங்கிய அமர்நாத் யாத்திரை  ஆகஸ்ட் மாதம் இறுதி வரை  நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த லட்சுமி பாய் (வயது 54) என்பவர் அமர்நாத் யாத்திரை சென்றுள்ளார்.  பல்தல் என்ற பகுதியில் அமைந்த அடிவார முகாமில் தங்கி இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.  இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் முகாமிலுள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.  இதனால் யாத்திரைக்கு சென்றவர்களில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Next Story