தேசிய செய்திகள்

இண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு + "||" + Delhi-Pune Indigo flight diverted to Indore as passenger suffers cardiac arrest

இண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு

இண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு
இண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு  இண்டிகோ விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது  பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

இது குறித்து விமான பணிப்பெண்கள் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு முதலுதவி செய்தனர்.  இதனையடுத்து விமானம் உடனடியாக இந்தூர் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

உடல்நலம் பாதித்த பயணி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமணைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.