தேசிய செய்திகள்

பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணி தொடரும் - நிதிஷ் குமார் : 17 எம்.பி. தொகுதிகளில் போட்டி + "||" + JD U Ready to Contest 17 Seats in Bihar as Nitish Kumar Says Alliance With BJP to Continue

பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணி தொடரும் - நிதிஷ் குமார் : 17 எம்.பி. தொகுதிகளில் போட்டி

பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணி தொடரும் - நிதிஷ் குமார் : 17 எம்.பி. தொகுதிகளில் போட்டி
பீகாரில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். #NitishKumar #BJP
பாட்னா,

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் உறுதிசெய்துள்ளது, அக்கட்சியின் தரப்பில் 17 தொகுதிகள் கேட்கப்படுகிறது. பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 12-ம் தேதி பீகார் மாநிலம் செல்கிறார். அப்போது கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என தெரிகிறது. 

புதுடெல்லியில் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டார். அப்போது கூட்டணி தொடர்பான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் தான் கூட்டணி என தெரிவித்துள்ளார். பீகாரில் பா.ஜனதாவுடன் கூட்டணி என்பதை கட்சியின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இருப்பினும் பா.ஜனதாவுடன் கூட்டணி என்பது பீகாரில் மட்டும்தான், பிற மாநிலங்களில் அங்கிருக்கும் நிலையை பொறுத்து அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், மாநிலத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால், எங்களால் 17 மற்றும் 18 தொகுதிகளுக்கு மேல் கேட்க முடியாது என தெரிவித்துள்ளார். 

பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மாநிலத்தில் தலா 17 தொகுதிகளில் போட்டியிடும், மீதம் இருக்கும் 6 தொகுதிகள் லோக் ஜன கட்சி போன்ற பிற கட்சிகளுக்கு வழங்கப்படும் என ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவை பீகார் மாநிலம் பாட்னா செல்லும் நிதிஷ் குமார் அவரை சந்தித்து பேசுகிறார். அப்போது இம்முடிவுக்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.