தேசிய செய்திகள்

எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - சுப்பிரமணியன் சாமி சொல்கிறார் + "||" + NDA needs 5 more years to honour promises Swamy

எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - சுப்பிரமணியன் சாமி சொல்கிறார்

எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - சுப்பிரமணியன் சாமி சொல்கிறார்
எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். #SubramanianSwamy


மும்பை,
 
மும்பையில்  விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி, “பொருளாதார வளர்ச்சிக்கள் வாக்குகளை கொண்டுவரப்போவாது கிடையாது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியா ஒளிருகிறது என்ற கோஷத்துடன் தன்னுடைய அரசுக்கு பிரசாரம் மேற்கொண்டார், ஆனால் தோல்வியில் முடிந்தது. மீண்டும் பாரதீய ஜனதா தன்னுடைய நம்பிக்கை (இந்துத்துவா) மற்றும் ஊழலற்ற அரசு என வாக்குறுதியளித்தது. இதனால் 2014-ல் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இந்துத்துவா மட்டுமே பா.ஜனதாவிற்கு உதவும்.

தேர்தலின் போது பா.ஜனதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கிவிட்டது. ஆனால் அதனுடைய பணியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். இப்போது இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, அதுகுறித்து பேச நான் நிதிமந்திரி கிடையாது என கூறியுள்ளார்.