தேசிய செய்திகள்

ஐதராபாத் ஓட்டலில் பரபரப்பு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகை மீட்பு: 2 பேர் கைது + "||" + Police arrested two persons involved in the Adultery

ஐதராபாத் ஓட்டலில் பரபரப்பு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகை மீட்பு: 2 பேர் கைது

ஐதராபாத் ஓட்டலில் பரபரப்பு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகை மீட்பு: 2 பேர் கைது
ஐதராபாத் ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகை போலீசாரால் மீட்கப்பட்டார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத், 

ஐதராபாத் நகரில் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் அமைந்து உள்ள ஒரு ஓட்டலில் நடிகைகளை வைத்து விபசாரம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வளர்ந்து வரும் இந்தி நடிகை மீட்கப்பட்டார்.

மேலும் விபசாரத்தை தொழிலாக நடத்தி வந்த ஜனார்த்தன ராவ் என்பவரும், வாடிக்கையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஜனார்த்தன ராவ், மும்பையில் இருந்து வளர்ந்து வரும் நடிகைகளை ஆசை வார்த்தைகள் கூறி ஐதராபாத் அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆவார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருடன் மேலும் ஒருவர் சேர்ந்து, மும்பையில் இருந்து வாரம் ரூ.1 லட்சம் சம்பளம் என ஒப்பந்த அடிப்படையில் வளர்ந்து வரும் நடிகைகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலித்து வந்ததும் அம்பலத்துக்கு வந்து உள்ளது.