தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் யாருடன் கூட்டணி? முடிவு எடுக்க நிதிஷ்குமாருக்கு அதிகாரம் + "||" + Who is the United Janata Dal's candidate in parliamentary elections? Nithishkumar has the power to decide

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் யாருடன் கூட்டணி? முடிவு எடுக்க நிதிஷ்குமாருக்கு அதிகாரம்

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் யாருடன் கூட்டணி? முடிவு எடுக்க நிதிஷ்குமாருக்கு அதிகாரம்
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் யாருடன் கூட்டணி அமைக்கும்? என்று முடிவு எடுக்க நிதிஷ்குமாருக்கு அதிகாரம் உள்ளது என அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
புதுடெல்லி, 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில்; ‘அடுத்த ஆண்டு (2019) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிகாரபூர்வமாக கட்சி தலைவர் நிதிஷ்குமார் தான் அனைத்துக்கட்சி தலைவர்களிடம் பேச்சு நடத்துவார். தற்போது பாரதீய ஜனதா கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். 2019-ம் ஆண்டு கூட்டணி குறித்தும் முக்கிய அரசியல் முடிவுகளையும் தலைவர் நிதிஷ்குமார் தான் எடுப்பார். அதற்கான அதிகாரத்தை அவருக்கு கட்சி அளித்து உள்ளது’ என்றனர்