தேசிய செய்திகள்

இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்; காலணிகளால் அடித்து தண்டனை வழங்கி பஞ்சாயத்தில் வாலிபர் விடுதலை + "||" + Man beaten up with shoes for sexually harassing girl, arrested

இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்; காலணிகளால் அடித்து தண்டனை வழங்கி பஞ்சாயத்தில் வாலிபர் விடுதலை

இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்; காலணிகளால் அடித்து தண்டனை வழங்கி பஞ்சாயத்தில் வாலிபர் விடுதலை
இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் காலணிகளால் அடித்து தண்டனை வழங்கப்பட்டு பஞ்சாயத்தில் விடுவிக்கப்பட்டார்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் கடைக்கு சென்றுள்ளார்.  அங்கிருந்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுபற்றி அந்த கிராமத்தின் சமூக பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இதில், தனது குற்றத்தினை அந்நபர் ஒப்பு கொண்டுள்ளார்.  தனது நடத்தைக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.  அவருக்கு காலணிகளால் அடித்து தண்டனை வழங்க பஞ்சாயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதன்பின் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

இந்த பஞ்சாயத்து பற்றிய வீடியோ வைரலாக பரவியது.  இந்த நிலையில், இளம்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இதனை அடுத்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. 21 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் கைது
21 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
2. இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 சிறைதண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3. பண்ருட்டியில் வழிப்பறி: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பண்ருட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. சென்னை அண்ணாநகரில் விபத்து: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
சென்னை அண்ணாநகரில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது
வலங்கைமான் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.