தேசிய செய்திகள்

இந்தியா, தென்கொரியா நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து + "||" + India, South Korea sign agreements on trade and commerce

இந்தியா, தென்கொரியா நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா, தென்கொரியா நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் தொழில்துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #IndiaAgreement
புதுடெல்லி,

4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்  மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். 

தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் மூன் ஜே-இன்-னுக்கு வரும் 10-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தென்கொரியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கிம் ஹயூன் சங்-உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைக்கு பின் இருவரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்பந்தமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இது குறித்து சுரேஷ் பிரபு கூறுகையில், 

”இரு நாட்டு உறவை முன்னெடுத்து வைக்கும் வகையில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் விளங்கும். இதன் மூலம் இரு நாட்டு உறவை ஒரு புதிய நிலைக்கு எடுத்து செல்வோம். மிகவும் இனிமையாக அமைந்த பேச்சுவாரத்தையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டன” எனக் கூறினார். இதனிடையே நொய்டாவிலுள்ள சாம்சங் ஆலைக்கு சென்ற அமைச்சர், ”வருங்காலங்களில் மொபல் போன்களின் உற்பத்தி 10 மில்லியன் அதிகரிக்கும். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி துவங்கப்பட்டிருக்கும் இந்த ஆலையில், இரு நாட்டு தலைவர்களும் பார்வையிடுவர்” எனக் கூறினார்.