நிர்பயா வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமும் வரவேற்கிறது -மத்திய அமைச்சர் பிபி சவுதாரி


நிர்பயா வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமும் வரவேற்கிறது -மத்திய அமைச்சர் பிபி சவுதாரி
x
தினத்தந்தி 9 July 2018 11:08 AM GMT (Updated: 9 July 2018 11:08 AM GMT)

நிர்பயா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமும் வரவேற்கிறது என மத்திய அமைச்சர் பிபி சவுதாரி கூறியுள்ளார். #NirbhayaCase

புதுடெல்லி, 

டெல்லியில் 'நிர்பயா’ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் தரப்பில் மரண தண்டையனையை மறுஆய்வு செய்ய கோரிய மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதிசெய்தது. இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பிபி சவுதாரி பேசுகையில், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமும் வரவேற்கிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பாடமாக அமையும்,” என கூறியுள்ளார். 

பா.ஜனதா எம்.பி.  மீனாட்சி லேகி பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது, மீட்டெடுத்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றாவாளிகளுக்கு ஒரு வலுவான செய்தியை கொடுக்க வேண்டும் என்ற சமூகத்தில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story