தேசிய செய்திகள்

டாடா குழும தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த சைரஸ் மிஸ்ட்ரியின் மனு நிராகரிப்பு + "||" + No Merit In Cyrus Mistry's Case Against Sacking As Tata Chairman: Court

டாடா குழும தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த சைரஸ் மிஸ்ட்ரியின் மனு நிராகரிப்பு

டாடா குழும தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த சைரஸ் மிஸ்ட்ரியின் மனு நிராகரிப்பு
டாடா குழும தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த சைரஸ் மிஸ்ட்ரியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. #CyrusMistry
மும்பை,

டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு  சைரஸ் மிஸ்த்ரி (48 வயது) நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டார். 

பின்னர், 2017 ஆம் ஆண்டு உயர்மட்ட குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார்.  சைரஸ் மிஸ்ட்ரி லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

சைரஸ் மிஸ்டிரியின் குடும்பம் நடத்தும் சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், தாங்கள் டாட்டா குழுமத்தில் சிறிய பங்குதாரர் என்ற பெயரில் நிறுவனங்களுக்கான தேசிய தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் டாட்டாவின் உயர்மட்ட குழு மற்றும் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும், சிறிய பங்குதாரர்களிடம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  

இந்த நிலையில், சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறி  அவரது மனுவை  கம்பெனிகள் தீர்ப்பாயம் நிராகரித்தது. 
மேலும், மிஸ்டிரி, டாட்டா நிறுவனத்தின் உயர்மட்ட குழுவின் நம்பிக்கையை பெறாததாலேயே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றும், உயர்மட்டக்குழுவுக்கு சைரஸ் மிஸ்ட்ரியை நீக்கும் தகுதி இருப்பதாகவும் தெரிவித்து விட்டது.  இந்த அறிவிப்பு வெளியானவுடன், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன. 

தொடர்ந்து போராடுவோம்

நிறுவனங்கள் தீர்ப்பாயத்தின் முடிவு பற்றி கருத்து தெரிவித்துள்ள சைரஸ் மிஸ்ட்ரி, அதிருப்தி அளிக்கிறது, அதேவேளையில், தீர்ப்பு தனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. நல்ல நிர்வாகம் மற்றும் சிறிய பங்குதாரர்களின் நலன் காக்கவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.