தேசிய செய்திகள்

போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது, இயந்திரம் பறிமுதல் + "||" + Five held in fake currency circulation, printing machine and counterfeit notes seized

போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது, இயந்திரம் பறிமுதல்

போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது, இயந்திரம் பறிமுதல்
போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீஸ் கைது செய்துள்ளது.


புவனேஷ்வர், 

ஒடிசா மாநிலம் கன்ஜாம் மாவட்டத்தில் போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த கும்பல் போலீஸ் வலையில் சிக்கியுள்ளது. சிறப்பு படை போலீசார் மகுரா பஜார் பகுதியில் நடத்திய சோதனையின் போது 5 பேரை கைது செய்துள்ளது. அவர்கள் அச்சடித்த போலி 100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ளது. அங்கிருந்து பிரிண்டிங் இயந்திரம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளது. ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து போலீஸ் கலர் பிரிண்டர், 5 மொபைல்கள், நெயில் பாலிஸ், பேப்பர் கட்டர் போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுடன் பிற கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.