தேசிய செய்திகள்

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Shopian encounter: Two militants killed, Army JCO injured

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ராணுவ அதிகாரி மற்றும் பொது மக்களில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். #ShopianEncounter
ஸ்ரீநகர், 

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தின் குண்டாலன் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த என்கவுண்டரில் 34 ஆர் ஆர் பிரிவைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை மற்றும் சிறப்பு படை வீரர்கள் இணைந்து செயல்பட்டனர்.

இந்நிலையில் குண்டாலம் பகுதியில் வீடு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக துப்பாக்கிச்சூடு மற்றும் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனிடையே தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து மக்களையும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றிய ராணுவத்தினர், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இத்தாக்குதலில் ஜேசிஓ என்னும் ராணுவ அதிகாரியும், பொதுமக்களில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அவர்கள் படாமிபக்ஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சோபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் இணையதள சேவை முடக்கி விடப்பட்டுள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...