தேசிய செய்திகள்

ஆசிரியர் - மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம் + "||" + Principal raped me days after his minor son did, alleges Class 10 Bihar student

ஆசிரியர் - மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம்

ஆசிரியர் - மாணவர்களால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம்
பீகாரில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
பாட்னா

பீகார் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அரசாங்க ஆவணங்களின் படி, 2018 ன் முதல் மூன்று மாதங்களில் 127 சிறுமிகளும் பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதே விவரம் ஜூன் மாதம் இறுதியில் இரண்டு மடங்காகி உள்ளது. 

பீகார் சரண் மாவட்டத்தில் பார்சாகர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர்  போலீஸ் சூப்பிரண்டு ஹர் கிஷோர் ராய்யை சந்தித்து புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில்  கடந்த 8 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் என 18 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக  புகார்  உள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார்  தலைமை ஆசிரியர் உதய்குமார் என்ற முகுந்த் சிங், ஆசிரியர் பாலாஜி மற்றும்  உடன் படிக்கும்  2 மாணவர்கள் என 4 பேரை கைது செய்து உள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உடன் படிக்கும் மாணவர்கள் 3 பேர்  மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டு உள்ளது.

அவர்கள் அதனை  வீடியோவை எடுத்து கொண்டு, பள்ளிக்கூடத்திலோ அல்லது வீட்டிலோ யாரிடமோ புகார் செய்தால், வீடியோவை பொதுமக்களுக்கு காட்டி விடுவதாக  அச்சுறுத்தி உள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவை மற்ற மாணவர்களுக்கு ஷேர் செய்து உள்ளனர்.  பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அந்த வீடியோ கிடைத்து உள்ளது. இதை தொடர்ந்து மாணவி மிரட்டபட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

அந்த பெண்ணால் சுட்டிக் காட்டப்பட்ட 18 பேரும்  முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளனர்.

 18 பேரால் சீரழிக்கபட்ட மாணவியின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாணவி அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

என்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் பள்ளி தலைமையாசியரின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த தலைமையாசியர் அவரது அறைக்கு அழைத்தார்.  நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

பின்னர் அவரது அறையில் என்னை சுத்தம் செய்துகொள்ள சொன்னார். அதன்பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.அப்போது, தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.  நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார் என கூறியுள்ளார்.