தேசிய செய்திகள்

மாணவி அருகில் அமர சண்டை ; சக மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் + "||" + Kolkata student stabs junior over ‘seat beside girl' argument in school bus

மாணவி அருகில் அமர சண்டை ; சக மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன்

மாணவி அருகில் அமர சண்டை ;  சக மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன்
பள்ளி பேருந்தில் மாணவி இருக்கைக்கு அருகே அமர இடம் கிடைக்காததால் விரக்தியடைந்த மாணவன், சக மாணவனை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து பள்ளி வாகனத்திலேயே வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். பேருந்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், மாணவி அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அந்த இருக்கையில் ஏற்கனவே அமர்ந்திருந்த 10-ம் வகுப்பு மாணவன் எழுந்திருக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவன், சிறுவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, சாலையோரத்தில் கிடந்த கத்தி ஒன்றினை கொண்டு, 10-ம் வகுப்பு மாணவனின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளான் சீனியர் மாணவன். இதனையடுத்து விரைந்து சென்ற வாகன ஓட்டுநர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். 

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.