தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் ஒரு பாதிரியார் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கினார் + "||" + In Kerala And one more priest In the case of rape

கேரளாவில் மேலும் ஒரு பாதிரியார் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கினார்

கேரளாவில் மேலும் ஒரு பாதிரியார் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கினார்
கேரளாவின் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்ததாக 4 பாதிரியார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கயாம்குளம்,

ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்  இதே திருச்சபையில் தற்போது பணியாற்றி வரும் ஒரு பாதிரியார் மீது  தற்போது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். இந்த பாதிரியார் 4 ஆண்டுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தின் கொய்பள்ளி கரன்மா என்னும் இடத்தில் பணிபுரிந்தவர் ஆவார்.


இதுபற்றி போலீசார் கூறுகையில், “குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி பாதிக்கப்பட்ட பெண் பினு ஜார்ஜ் என்ற பாதிரியாரின் அலுவலகத்துக்கு சென்றபோது அவரை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, திருச்சபை நிர்வாகிகளிடம் அந்த பெண் உடனடியாக புகார் செய்தார். அப்போது அவரிடம் எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த தொல்லையும் பாதிரியாரிடம் இருந்து வராது என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் தனக்கு தொல்லை கொடுத்ததுடன் பாதிரியார் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வந்ததால் தற்போது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசை அவர் நாடி இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.