தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் இணையதள தொடர் - நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு + "||" + Rajeev Gandhi's disgraced website - Dismissed petition in the Delhi High Court

ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் இணையதள தொடர் - நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு

ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் இணையதள தொடர் - நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் இணையதள தொடரை நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

‘நெட்பிளிக்ஸ்’ இணையதளத்தில், ‘சேக்ரட் கேம்ஸ்’ என்ற புதிய தொடர் இடம் பெற்று வருகிறது. பிரபல இந்தி நடிகர்கள் சயீப் அலிகான், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் சில காட்சிகளும், வசனங்களும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும்வகையில் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் ஷசாங்க் கார்க் என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “போபர்ஸ் வழக்கு, ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி வழக்கு போன்ற வரலாற்று சம்பவங்களை இந்த தொடர் தவறாக குறிப்பிடுகிறது. ராஜீவ் காந்தியையும், அவரது குடும்பத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடும் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும், தொடரின் தயாரிப்பாளருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், கீதா மிட்டல் விலகிக் கொண்டதால், வேறு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.



தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி
நாடாளுமன்றத்தில் நான் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார். என்னை சந்திக்க அவருக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
2. போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது
போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
3. புதுடெல்லி: ஜெயின் துறவி தருண் சாகர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
ஜெயின் துறவியான தருண் சாகரின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #PMModi #JainMonkTarunSagar
4. ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற மாவோயிஸ்ட்கள் திட்டம் - மராட்டிய போலீஸ்
ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டதற்கான ஆதாரம் உள்ளது என மராட்டிய போலீஸ் தெரிவித்துள்ளது.
5. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் கொடி ஏற்றினார்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் தேசியகொடி ஏற்றினார்.