தேசிய செய்திகள்

டெல்லியை தாக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் திட்டம் முறியடிப்பு + "||" + Attacking Delhi IS Motion project failure

டெல்லியை தாக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் திட்டம் முறியடிப்பு

டெல்லியை தாக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் திட்டம் முறியடிப்பு
டெல்லியை தாக்க ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தீட்டிய சதித்திட்டத்தை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து இருப்பதாக பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான், துபாய், இந்தியா ஆகிய நாடுகளில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய கண்காணிப்புக்கு பிறகு இந்த சதித்திட்டம் கண்டறியப்பட்டது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 12 பயங்கரவாதிகள், உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரிய வந்தது.


அப்படி இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதி, டெல்லி விமான நிலையம், வசந்த் கஞ்ச் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களை தகர்க்க ஒத்திகை பார்த்தான். அவனை நீண்ட காலமாக கண்காணித்து வந்த பாதுகாப்பு படையினர், 2017-ம் ஆண்டு இறுதியில் கைது செய்தனர். பிறகு அவனை தங்களது உளவாளியாக மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தின் சதித்திட்டத்தை முறியடித்தனர். மேலும், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அவன், அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். தலீபான்களுக்கு எதிரான போரில், அமெரிக்க ராணுவத்துக்கு அவன் உதவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


தொடர்புடைய செய்திகள்

1. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வில் தகவல்
தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா, என அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
2. நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி
நாடாளுமன்றத்தில் நான் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார். என்னை சந்திக்க அவருக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
3. போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது
போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
4. புதுடெல்லி: ஜெயின் துறவி தருண் சாகர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
ஜெயின் துறவியான தருண் சாகரின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #PMModi #JainMonkTarunSagar
5. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் கொடி ஏற்றினார்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் தேசியகொடி ஏற்றினார்.