தேசிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணைய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது + "||" + Thoothukudi firing incident: National Human Rights Commission 2 judges hear session

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணைய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணைய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.


தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக,வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. இது ஜனநாயக நாடா, போலீஸ் சர்வாதிகார நாடா?" - ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இது ஜனநாயக நாடா, போலீஸ் சர்வாதிகார நாடா?" என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. #ThoothukudiShooting #Sterlite
3. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக தடயங்கள் சேகரிப்பு
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 2-வது நாளாக தடயங்கள் சேகரித்தனர்.
4. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை இலாகா விளக்கம் கேட்கிறது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறை இலாகா உத்தரவிட்டு உள்ளது.