தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து: அமர்நாத் பக்தர்கள் 13 பேர் படுகாயம் + "||" + Amarnath Yatra: 13 pilgrims injured as tempo rams into truck

ஜம்மு காஷ்மீரில் நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து: அமர்நாத் பக்தர்கள் 13 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் நின்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து: அமர்நாத் பக்தர்கள் 13 பேர் படுகாயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 அமர்நாத் பக்தர்கள் படுகாயமடைந்தனர். #AmarnathPilgrimsInjured
உதம்பூர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்க்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வர். இந்தாண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கிய நிலையில், பக்தர்கள் அமர்நாத் குகைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் அமர்நாத் பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று உதம்பூர் மாவட்டத்தின் பிர்மா பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பக்தர்கள் பலத்த காயமுற்றனர். மீதமுள்ளவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். படுகாயமடைந்த அனைவரும் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 

விபத்து குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ”விபத்து சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிம் தொடர்பு கொண்டு பேசினேன். படுகாயமடைந்தவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஜான்சி பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. அவர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை” என தெரிவித்துள்ளார்.