தேசிய செய்திகள்

மூன்று நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் + "||" + Rajnath to pay three-day visit to Bangladesh

மூன்று நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

மூன்று நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்ல இருக்கிறார். #RajnathSingh
புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காளதேசத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

இச்சுற்றுப்பயணத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்திக்கும் ராஜ்நாத் சிங், பயங்கரவாத எதிர்ப்பு, இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபட முயற்சிக்கும் பயங்கரவாத அமைப்புகள், எல்லை தாண்டி கள்ள நோட்டுகள் அதிகரித்தல் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். மேலும் இருவருக்குமிடையே ரோஹிங்யா பிரச்சனை குறித்த விவாதங்கள் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

ஜூலை 13-ஆம் தேதி வங்காளதேசம் செல்லும் ராஜ்நாத் சிங்குடன், உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளும் பங்கு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.