தேசிய செய்திகள்

கங்கை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த தேசிய அளவிலான குத்து சண்டை வீரரின் உடல் மீட்பு + "||" + National-level boxer drowns in canal, body recovered

கங்கை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த தேசிய அளவிலான குத்து சண்டை வீரரின் உடல் மீட்பு

கங்கை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த தேசிய அளவிலான குத்து சண்டை வீரரின் உடல் மீட்பு
கங்கை கால்வாயில் குளிக்க சென்று மூழ்கி உயிரிழந்த தேசிய அளவிலான குத்து சண்டை வீரரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் அபிஷேக் சர்மா (வயது 21).  தேசிய அளவிலான குத்து சண்டை வீரரான இவர் கடந்த ஞாயிற்று கிழமை முசாபர் நகரில் இருந்து கத்தோலி நகருக்கு வந்துள்ளார்.

அங்கு கங்கை கால்வாயில் குளிக்க முயன்ற அவர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து விட்டார்.  அவரது உடலை மீட்பு பணியினர் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.  இந்த நிலையில், அவரது உடல் நேற்று மாலை மீட்கப்பட்டு உள்ளது என போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் அலகாபாத் நகரில் வருகிற ஜூலை 20ந்தேதி நடைபெற உள்ள போட்டி ஒன்றில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அபிஷேக் உயிரிழந்து உள்ளார்.