மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 36,525.66 புள்ளிகளாக உயர்வு; நிப்டி 11 ஆயிரம் எட்டியது


மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 36,525.66 புள்ளிகளாக உயர்வு; நிப்டி 11 ஆயிரம் எட்டியது
x
தினத்தந்தி 12 July 2018 5:36 AM GMT (Updated: 12 July 2018 5:36 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 36,525.66 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 259.73 புள்ளிகள் உயர்வடைந்து 36,525.66 புள்ளிகளாக உள்ளது.

இது கடந்த ஜனவரி 29ந்தேதி 36,443.98 என்ற முந்தைய பதிவை விட அதிகம் ஆகும்.

வங்கி பங்குகள் மிக பெரிய அளவில் லாபத்தினை சந்தித்துள்ள பிரிவாக உள்ளது.  பேங்க் ஆப் பரோடா பங்குகள் 2 சதவீதம் அளவிற்கு லாபத்துடன் உள்ளன.  அதனை தொடர்ந்து எஸ்.பி.ஐ., யெஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை லாபத்துடன் உள்ளன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 77.35 புள்ளிகள் உயர்வடைந்து 11,025.65 புள்ளிகளாக உள்ளது.


Next Story