பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் - பா.ஜனதா தலைவர் அமித் ஷா


பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் - பா.ஜனதா தலைவர் அமித் ஷா
x
தினத்தந்தி 12 July 2018 10:44 AM GMT (Updated: 12 July 2018 10:44 AM GMT)

பீகாரில் நிதிஷ் குமாருடன் எங்கள் கூட்டணி தொடரும் என பா.ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah


பாட்னா,


2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கிடையே டெல்லியில் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பா.ஜனதாவுடன் தான் கூட்டணி என தெரிவிக்கப்பட்டது. மேலும் 17 தொகுதிகளில் போட்டியெனவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமித்ஷாவிடம், நிதிஷ் குமார் பேசுவார் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பீகார் மாநிலம் சென்றுள்ளார். பாட்னாவில் இன்று காலை மாநில முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். விருந்தினர் மாளிகையில், நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமித்ஷாவுக்கு காலை உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, அமித்ஷாவுடன் பீகார் பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர். 2019  பாராளுமன்ற தேர்தல் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பீகாரில் நிதிஷ் குமாருடன் எங்கள் கூட்டணி தொடரும் என பா.ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 

Next Story