தேசிய செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் - வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி + "||" + priest was a victim of sexual complaint Trying to escape abroad

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் - வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் - வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி
பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்வதையடுத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
திருவனந்தபுரம்

கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.  இந்தப் பள்ளி, பாதிரியார் பிரான்கோ முலக்கல் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் பாதிரியார் முலக்கல் கட்டாயப்படுத்தி தன்னை பலமுறை  பலாத்காரம் செய்ததாக ஆசிரியை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, பாதிரியார் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், கேரளாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.