தேசிய செய்திகள்

தினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு + "||" + Dinakaran's sister interim bail extension

தினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

தினகரன் சகோதரிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
சசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரன் சகோதரியுமான சீதளதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன்.

புதுடெல்லி,

எஸ்.ஆர்.பாஸ்கரன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரன், சீதளதேவி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சீதளதேவிக்கு 3 ஆண்டுகளும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சீதளதேவி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய இருவார காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதளதேவிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...