தேசிய செய்திகள்

சசிதரூர் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் + "||" + BJP has condemned Sasitharur's opinion

சசிதரூர் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்

சசிதரூர் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
பா.ஜனதா மீண்டும் வென்றால் ‘இந்து பாகிஸ்தான்’ உருவாகி விடும் என்று கூறிய சசிதரூரின் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர், நேற்று முன்தினம் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், ‘2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், காந்தி, நேரு, படேல் போன்ற தலைவர்கள் கண்ட கனவை கலைத்து ‘இந்து பாகிஸ்தானை’ உருவாக்கி விடுவார்கள்’ எனக்கூறினார்.

அனைவரையும் ஏற்றுக்கொள்ளாத, சகிப்புத்தன்மை அற்ற மத்திய அரசு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதாகவும், அதன் மூலம் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்து அரசை உருவாக்குவதும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சலுகைகளை பறிப்பதும்தான் பா.ஜனதாவினரின் சிந்தனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சசிதரூரின் இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக அவருக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘இந்தியாவையும், இந்துக்களையும் அவமதிக்கும் வாய்ப்பு ஒன்றையும், வெட்கமில்லாத காங்கிரஸ் கட்சி விட்டுவிடாது. இந்து பிராந்தியத்தில் இருந்து இந்து பாகிஸ்தான் வரை பாகிஸ்தானை சாந்தப்படுத்தும் காங்கிரசின் கொள்கைகள் இணையற்றது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கட்சியின் கர்நாடக எம்.பி.யான சோபா கரண்ட்லேயும் இதே கருத்தை கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் எங்கும் இருக்காது எனவும் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.
2. பா.ஜனதாவிற்கு மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளனர் - சசிதரூர் கிண்டல்
பா.ஜனதாவிற்கு மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளனர் என சசிதரூர் கிண்டல் அடித்துள்ளார்.
3. பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்
பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
4. ராஜஸ்தானில் 13 மந்திரிகள் தோல்வி
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அங்குள்ள மொத்தம் 19 மந்திரிகளில் 13 பேர் தோல்வியை தழுவினர்.
5. காங்கிரஸ் வெற்றி; பா.ஜனதா முதல்வர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்
சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா முதல்வர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.