தேசிய செய்திகள்

வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல் + "||" + Surveillance state SC raps government over WhatsApp tracking

வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்

வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்
மக்களின் வாட்ஸ்-அப் தகவல்களை ‘டேப்’ செய்ய மத்திய அரசு விரும்புகிறது என சுப்ரீம் கோர்ட்டு சாடியுள்ளது.
புதுடெல்லி,

சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தொடர்பாக  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மஹுவா மாய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

 வழக்கு விசாரணை,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மஹுவா மாய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இதுதொடர்பான நடவடிக்கைக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி மத்திய அரசு டெண்டர் கோருகிறது. சமூக வலைதள மையம் உருவாக்குவதன் மூலம் மக்களின் சமூக வலைதளங்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என வாதிட்டார். இதனையடுத்து, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது என சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் செய்தது.

சமூக வலைதளங்களை அரசு கண்காணிப்பதற்கான முன்மொழிவை அரசு அளித்துள்ளதையும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
 
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவு ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது, இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டுள்ளது.

 மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கும் என கூறியுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. 5 ஆர்வலர்களை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது
5 ஆர்வலர்களை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
2. ரபேல் போர் விமான வழக்கு விசாரணை அக்டோபர் 10–க்கு ஒத்திவைப்பு
ரபேல் போர் விமான வழக்கு விசாரணை அக்டோபர் 10–க்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளியின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
4 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதித்த மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
4. முன்னாள் மந்திரியிடம் ‘வாட்ஸ் அப்’ மூலம் குற்ற வழக்கில் விசாரணை நடத்திய கோர்ட்டு
ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் மந்திரியிடம் ‘வாட்ஸ் அப்’ மூலம் குற்ற வழக்கில் ஒரு கோர்ட்டு விசாரணை நடத்தி உள்ளது. இதைக் கண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிர்ச்சி அடைந்து உள்ளது.
5. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.