இளம்பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு குஜராத் பா.ஜனதா துணை தலைவர் ராஜினாமா


இளம்பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு குஜராத் பா.ஜனதா துணை தலைவர் ராஜினாமா
x
தினத்தந்தி 13 July 2018 12:47 PM GMT (Updated: 13 July 2018 12:47 PM GMT)

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை அடுத்து குஜராத் மாநில பா.ஜனதா துணை தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆமதாபாத்,

கட்சு மாவட்டத்தை சேர்ந்த 53 வயதாகும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பானுசாலி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பா.ஜனதா தலைவர் ஜிது வாகானிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய ராஜினாமாவை பா.ஜனதா ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பானுசாலி கடந்த 2007 முதல் 2012 வரையில் அப்தாசா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். 

சூரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் பானுசாலிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்யக்கோரி புகார் கொடுத்தார். இதுவரையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கமிஷனர் சதிஷ் சர்மா கூறியுள்ளார். பேஷன் டிசைன் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஏமாற்றி என்னை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார். என்னை மிரட்டுவதற்கு, அவருடைய உதவியாளர்களில் ஒருவர் செல்போனில் இச்சம்பவத்தை படம் எடுத்து உள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் எனக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார் பானுசாலி.

Next Story