தேசிய செய்திகள்

கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாதிரியார் கைது + "||" + Another rape accused Kerala priest arrested, 2 others still absconding

கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாதிரியார் கைது

கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாதிரியார் கைது
கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார்.


திருவனந்தபுரம், 


கேரளாவில் மலங்கரா மரபு வழி திருச்சபையில், பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை மிரட்டி 4 பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. தலைமறைவான பாதிரியார்கள் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த வழக்கில் 2–வது குற்றவாளியும், தலைமறைவான பாதிரியார்களில் ஒருவருமான ஜோப் மேத்யூ நேற்று கொல்லம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் 3–வது குற்றவாளியான ஜான்சன் வி.மேத்யூவை பத்தினம் திட்டாவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் திருவல்லாவுக்கு கொண்டு சென்றனர். பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய இன்னும் 2 பாதிரியார்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.