தேசிய செய்திகள்

மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேர் சுட்டுக்கொலை + "||" + Central Reserve Police Force 2 people shot and killed

மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேர் சுட்டுக்கொலை

மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள அசாபால்சவுக் என்கிற இடத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் மத்திய ரிசர்வ் படை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயம் அடைந்தனர் போலீசார் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு முன் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சப்–இன்ஸ்பெக்டரும், மற்றொரு போலீஸ்காரரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.