சத்தீஷ்கரில் 12-ம் நூற்றாண்டு கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு


சத்தீஷ்கரில் 12-ம் நூற்றாண்டு கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 14 July 2018 2:09 AM GMT (Updated: 14 July 2018 2:09 AM GMT)

சத்தீஷ்கர் மாநிலத்தில் சாலை கட்டுமானப்பணி நடைப்பெற்று கொண்டிருக்கையில் 12-ம் நூற்றாண்டு கால தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #ChhattisgarhGoldCoins

ராய்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் கொண்டகாஓன் மாவட்டத்தில் அரசு சார்பில் சாலை கட்டுமானப்பணி நடைப்பெற்றது. இந்நிலையில் பணி நடைபெற்று கொண்டிருக்கையில் கட்டுமான தொழிலாளி ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய மண்பாண்டம் ஒன்றை கண்டெடுத்துள்ளார். இதனிடையே இந்த நாணயங்கள் 12-ம் நூற்றாண்டை சார்ந்த தங்க நாணயங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் நீல்காந்த் டேகம் கூறுகையில், ”கோர்கோடீ மற்றும் பெட்மா கிராமங்களுக்கிடையே சாலை கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அடங்கிய மண்பாண்டம் கண்டெடுக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தங்க நாணயங்கள் மிகவும் முதன்மையானது. மண்பாண்டத்தில் 57 தங்க நாணயங்கள் மற்றும் சில வெள்ளி நாணயங்கள் இருந்தன. இந்நாணயங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் இந்நாணயங்கள் குறித்து மேலும் பல தகவல்களை வழங்குவார்கள்” எனக் கூறினார். 

Next Story