தேசிய செய்திகள்

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் கணவரை டெல்லி போலீஸ் கைது செய்தது + "||" + Air Hostess, Suicide, Delhi, Lufthansa, Delhi Police, Anissia Batra

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் கணவரை டெல்லி போலீஸ் கைது செய்தது

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் கணவரை டெல்லி போலீஸ் கைது செய்தது
விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் கணவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.

புதுடெல்லி,

 
ஜெர்மனி நாட்டின் விமான சேவை நிறுவனம் ஒன்றில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர், அனிசியா(வயது 39). 

டெல்லி தெற்கு பஞ்ச சீல பூங்கா பகுதியில் கணவருடன் வசித்து வந்த இவர் கடந்த 13-ந்தேதி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், தனது மனைவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அனிசியா பரிதாபமாக உயிர் இழந்தார். இதை தற்கொலை வழக்காக டெல்லி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், விமான பணிப்பெண்ணின் தந்தையும் ராணுவ அதிகாரியுமான பத்ரா, தனது மகளின் சாவுக்கு கணவரே காரணம். இதுகுறித்து நாங்கள் முன்பே போலீசில் புகார் செய்திருக்கிறோம் என்று கூறினார். 

இது தொடர்பாக கணவரின் சொகுசு கார், கணவன்-மனைவியின் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் தவறாமல் ஆஜராகும்படி விமான பணிப்பெண்ணின் கணவர், அவருடைய பெற்றோர் மற்றும் சாட்சிகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். வரதட்சணை கேட்டு எங்களுடைய மகளை கொடுமை செய்து உள்ளனர் என அனிசியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ் அனிசியாவின் கணவரை கைது செய்துள்ளது.