ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி


ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 17 July 2018 9:11 AM GMT (Updated: 17 July 2018 9:11 AM GMT)

சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி

கடந்த வாரம் ராகுல்காந்தி முஸ்லீம் தலைவர்களை சந்தித்ததை தொடர்ந்து  "காங்கிரஸ் முஸ்லீம்கள் கட்சி  " என்று பாரதீய ஜனதா விமர்சனம் செய்தது. இந்த விவகாரத்தில்  காங்கிரஸ் அதனை நிராகரித்தது. இது 132 கோடி இந்தியர்களின் ஒரு கட்சியாகும் என்று வலியுறுத்தியது.

இது குறித்து பிரதமர் மோடி அசம்கார் பொதுகூட்டத்தில் பேசும் போது,

 நான் பத்திரிகையில் படித்தேன். காங்கிரஸ் தலைவர் சொன்னதாக  காங்கிரஸ் முஸ்லீம்களின் ஒரு கட்சியாகும் மற்றும்  கடந்த இரண்டு நாட்களாக  இது பற்றி விவாதிக்கப்பட்டது. " இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. "மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது  இயற்கை வளங்கள் மீதான முதல் உரிமையை முஸ்லீம்கள் வைத்திருப்பதாக அவர் கூறினார் என பேசினார்.

இது தொடர்பாக  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்களின்  வரிசையில் கடைசியில் இருக்கும் நபருடன் நான் நிற்கிறேன். அவர்களின் மதம், சாதி அல்லது  நம்பிக்கைகள் என்னை பொறுத்தவரை சிறியவையே.

"நான் வலியில் இருப்பவர்களைத் தேடுகிறேன், அவர்களைத் தழுவிக் கொள்கிறேன், வெறுப்பு மற்றும் அச்சத்தை நான் அழிக்கிறேன், எல்லா உயிர்களையும் நான் நேசிக்கிறேன், நான் காங்கிரஸ். என கூறி உள்ளார்.



Next Story