சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி


சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி
x
தினத்தந்தி 17 July 2018 10:45 AM GMT (Updated: 17 July 2018 10:45 AM GMT)

சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய விவகாரத்தில் குமாரசாமி விளக்கமளித்துள்ளார்.


பெங்களூரு,

 
ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், மந்திரி களாக பதவி ஏற்றவர்கள் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சார்பில் பெங்களூரு ஜே.பி.பவனில் பாராட்டு விழா நடைபெற்றது. மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி பேசுகையில், மாநில மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும், தன்னையும் புறக்கணித்து விட்டதாக கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். 

நான் முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை என்று கூறிய போதும் கண்ணீர் விட்டு அழுதபடியே பேசியது தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் குமாரசாமி விளக்கம் அளிக்கையில், “காங்கிரஸ் பற்றியோ, காங்கிரஸ் தலைவர்கள் பற்றியோ நான் பேசவில்லை. என்னுடைய பேச்சில் காங்கிரஸை நான் குறிப்பிடவே இல்லை. நிகழ்ச்சி எங்களுடைய கட்சி விழாவாகும், நான் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன். என்னுடைய பேச்சை மீடியாக்கள் தவறாக சித்தரித்துள்ளன.” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story