தேசிய செய்திகள்

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ + "||" + RBI to Issue New Design ₹ 100 Denomination Banknote

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது  ஆர்பிஐ
விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ஆர்பிஐ கூறி உள்ளது. அதன் மாதிரியை வெளியிட்டது. #RBI #Denomination

சென்னை, 

இந்தியாவில் 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு, புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.50, ரூ.10 என புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி புதிய வடிவில் பல்வேறு வண்ணங்களில் அச்சடித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டது நாட்டில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994–ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வந்தன. படிப்படியாக பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

தற்போது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரூ.100 நோட்டுகளும் செல்லும் என கூறி உள்ளது.புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது  ஆர்பிஐ.