தேசிய செய்திகள்

15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது + "||" + Teacher who sexually assaulted 15-year-old boy in Chandigarh gets bail for being a lady

15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது

15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது
15 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு பெண் என்ற காரணத்தினால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சண்டிகார்,

இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. சண்டிகாரில் ராம் தர்பாரில் கடந்த மாதம் 34 வயது ஆசிரியை ஒருவர், தன்னிடம் டியூசன் படிக்க வந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார். அரசு பள்ளியில் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியையிடம் பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளி முடிந்ததும் டியூசன் படித்து வந்துள்ளார். அப்போதுதான் பாலியல் தொல்லை நடந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சமூக ஆர்வலர்களை நாடி புகார் கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் தரப்பில் ஜாமீன் கேட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பூனம் ஆர் ஜோஷி, 50 ஆயிரம் தொகையை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். ஆசிரியைக்கு ஜாமீன் வழங்கியதற்கு முக்கிய காரணம் என்னவென்று தெரிவிக்கப்படாமல், பெண் என்ற காணத்திற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு உடல் நிலை சரியில்லை என ஆசிரியை தரப்பில் ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின்படி ஜாமீன் பெறுவது மிகவும் கடினமானது. இருப்பினும் ஆசிரியை ஜாமீன் பெற்றுள்ளார். 

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக மீண்டும் போலீஸ் செல்லப் போவதாக குழந்தைகளுக்கான உதவி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.