தேசிய செய்திகள்

பேர குழந்தைகள் கேலி செய்யும் என்ற அச்சத்தில் பிறந்த குழந்தையை கொன்ற பெற்றோர் + "||" + Parents kill newborn fearing mockery by family members

பேர குழந்தைகள் கேலி செய்யும் என்ற அச்சத்தில் பிறந்த குழந்தையை கொன்ற பெற்றோர்

பேர குழந்தைகள் கேலி செய்யும் என்ற அச்சத்தில் பிறந்த குழந்தையை கொன்ற பெற்றோர்
பேர குழந்தைகள் கேலி செய்யும் என்பதற்காக பிறந்த குழந்தையை பெற்றோர் கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடந்துள்ளது.

ஜல்பைகுரி,

மேற்கு வங்காளத்தில் கூச்பெஹார் மாவட்டத்தில் வசித்து வந்த 47 வயது கொண்ட கூலி தொழிலாளி ஒருவர் கர்ப்பிணியான 38 வயது மனைவியுடன் ஜல்பைகுரி மாவட்டத்தின் சப்திபரி கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தொழிலாளியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 2 மகன்கள் மற்றும் பல பேர குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தங்களை கிண்டல் செய்வார்கள் என்ற அச்சத்தில் இருந்த தம்பதி, பிறந்த பெண் குழந்தையை கொன்று உறவினர் வீட்டின் அருகே உள்ள குளத்தில் தூக்கி போட்டுள்ளனர்.

அந்த ஊர் பொதுமக்கள் குளத்தில் மிதந்த குழந்தையின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து கிராம பஞ்சாயத்தில் கூறியுள்ளனர்.  குழந்தை தங்களுடையது என தம்பதியின் உறவினர் தெரிவித்துள்ளார்.  இதனை அடுத்து போலீசில் எப்.ஐ.ஆர். பதிவானது.

போலீசார் தம்பதியை கைது செய்தனர்.  அவர்கள் இருவரையும் ஜல்பைகுரியில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தினர்.  அவர்களுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில், கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் - தொல்.திருமாவளவன்
சேலத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
2. 3 வயது சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; பெற்றோர் உள்பட 3 பேர் கைது
3 வயது சிறுமியை கொன்ற வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.