பாராளுமன்றத்தில் காட்டமாக பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்!


பாராளுமன்றத்தில் காட்டமாக பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்!
x
தினத்தந்தி 20 July 2018 9:26 AM GMT (Updated: 20 July 2018 9:26 AM GMT)

பாராளுமன்றத்தில் காட்டமாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார். #RahulGandhi #PMModi #NoConfidenceMotion

புதுடெல்லி,

பாராளுமன்றத்தின் மக்களவையில் காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இருதரப்பு இடையே மக்களவையில் பெரும் விவாதம் நடைபெற்றது. ராகுலின் பேச்சு காரணமாக அமளி நேரிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பேசிய ராகுல் காந்தி, அவை ஒத்திவைக்கப்பட்ட போது கிடைத்த நேரத்தில் உங்களுடைய எம்.பி.க்கள் (பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சி எம்.பி.க்கள்)  சிறப்பாக பேசினீர்கள் என வாழ்த்து தெரிவித்தார்கள் என்று குறிப்பிட்டார். 

பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி வேகமாக பிரதமர் மோடி இருந்த பகுதியை நோக்கி சென்றார். அவர் எதிர்பார்க்காத நிலையில் அவரை கட்டி அனைத்து, கைகுலுக்கினார். பிரதமர் மோடியும் சிரித்துக்கொண்டு, அவரை மெல்ல தட்டினார். காரசாரமாக விவாதம் நேரிட்ட போது ராகுல் அன்பாக நெருங்கி சென்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நீங்கள் என்னை பப்பு என்று அழைக்கலாம், ஆனால் நான் உங்களை வெறுக்க மாட்டேன் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும் ராகுலை பாராட்டினார்.  


Next Story