டுவிட்டர் டிரண்டிங்: ஹிட்டடித்த ராகுல்காந்தியின் புகைப்படம்


டுவிட்டர் டிரண்டிங்: ஹிட்டடித்த ராகுல்காந்தியின் புகைப்படம்
x
தினத்தந்தி 21 July 2018 4:44 AM GMT (Updated: 21 July 2018 4:44 AM GMT)

ராகுல்காந்தியின் கண் அடிக்கும் புகைப்படம் டுவிட்டர் டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. #RahulGandhi #Twitter

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்த போதிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் செயல் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது உரையின் போது, பாஜக மீது சரமாரியாக குற்றம்சாட்டினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று பிரதமர் மோடிக்கு கைகொடுத்து பின் கட்டியணைத்தார்.

பின்னர் தனது இருக்கைக்கு திரும்பி வந்த ராகுல்காந்தி, சக கட்சி உறுப்பினரைப் பார்த்து சிரித்தபடி கண்ணடித்தார். அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ராகுல்காந்தி கண் அடிக்கும் புகைப்படத்தை பலரும் மீம்ஸாக பகிர்ந்து வருவதால், அந்த புகைப்படம் டுவிட்டர் டிரண்டிங்கில் இடம் பிடித்தது. இதை  ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வினி யாதவ் உள்பட பல முக்கிய பிரபலங்களும் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு அடார் லவ் திரைப்படத்தில் வரும் பாடலின் நடிகை பிரியா வாரியர், நான் கண்ணடித்ததைப் போல ராகுல் காந்தியும் கண்ணடித்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது ராகுல்காந்தியின் கண்ணசைவும், மலையாள நடிகை பிரியா வாரியரின் கண்ணசைவையும் இணைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story