பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுத்த 11ஆம் வகுப்பு மாணவி


பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுத்த 11ஆம் வகுப்பு மாணவி
x
தினத்தந்தி 21 July 2018 6:21 AM GMT (Updated: 21 July 2018 6:21 AM GMT)

பேஸ்புக் காதலால், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 11ஆம் வகுப்பு மாணவி, சாப்பாட்டிற்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜ்லிங்கை சேர்ந்தவர்  11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்தார். இருவரும் சேட்டிங் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மொபைல் நம்பர்களை பகிர்ந்து செல்போனிலும் பேசி வந்துள்ளனர்.

அந்த இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பி அந்த பெண், கடந்த ஜனவரி மாதம் பணத்துடன் வீட்டை விட்டு  வெளியேறியுள்ளார். மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, மகள் எங்கே சென்றார் என தெரியாமல் தவித்து வந்தனர்.

பணத்துடன் வெளியேறிய மாணவி அந்த இளைஞனுடன் கேரளா உள்ளிட்ட ஊர்களில் சுற்றித்திரிந்து விட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இருவருக்கும் வேலை தெரியாததால் அவர்களை வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். கையிலும் பணம் இல்லாததால் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க தள்ளப்பட்டார் அந்த மாணவி. மேலும் அந்த மாணவியை இளைஞன் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளான்.

இதையடுத்து பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டார் அந்த பெண். அவர்கள் அந்த மாணவிக்கு உணவு வழங்கினர். அவர்களிடம் செல்போன் வாங்கி, தனது பெற்றோருக்கு போன் செய்தார் அந்த மாணவி. பதறிப்போன அவர்கள் உடனடியாக திருப்பூருக்கு வந்து மகளை மீட்டனர். முகநூல் காதல் என்பது இவ்வளவு தான் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.


Next Story