8 வயது சிறுமியின் மூளையில் 100 நாடா புழுக்களின் முட்டைகள்


8 வயது சிறுமியின் மூளையில் 100 நாடா புழுக்களின் முட்டைகள்
x
தினத்தந்தி 23 July 2018 7:32 AM GMT (Updated: 23 July 2018 7:32 AM GMT)

8 வயது சிறுமியின் மூளையில் 100 நாடா புழுக்களின் முட்டைகள் இருந்ததால் கடுமையான தலைவலி மற்றும் வலிப்பு தாக்குதல்களுக்கு ஆளானார்.


8 வயதான ட்ருஷிகாவின்  (பெயர் மாற்றம்)  மூளை  நாடாபுழுக்கள் முட்டையால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தலைவலி மற்றும் வலிப்பு தாக்குதல்களுக்கு பிறகு ட்ருஷிகா இறுதியில் போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது மூளையில் 100 நீர்க்கட்டிகள் இருந்தன. உண்மையில் அவைகள் நாடா புழுக்களின் முட்டைகள் ஆகும். அவைகள்  வயிற்றில் இருந்து இரத்த ஓட்டத்தின் மூலம் மூளையை அடைந்து உள்ளது.

மருத்துவர்கள் கூற்றுப்படி   ட்ருஷிகா நரம்பியல் அழுக்கு மற்றும் நீர் கட்டிகளால் அவளது மூளையில்  வீக்கம் அதிகரித்திருந்தது. அவர் மூச்சு திணறலால்  நடக்க முடியவில்லை.

எனினும்,   மருந்துகள் கொடுக்கபட்ட  போதிலும், அவரது வலிப்பு தாக்குதல் மற்றும் தலைவலி, தொடர்ந்து கொண்டு இருந்தது.

கால்-கை வலிப்புக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் நாடாப்புழு தொற்று நோயயே காரணம் என  உலக சுகாதார அமைப்பு (WHO)   அங்கீகரித்து உள்ளது.


Next Story