பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை


பீகாரில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; ஒரு சிறுமி கொலை
x
தினத்தந்தி 23 July 2018 9:35 AM GMT (Updated: 23 July 2018 9:35 AM GMT)

பீகார் தங்கும் விடுதியில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் மேலும் ஒரு சிறுமி கொலை செய்து புதைக்கபட்டு உள்ளார்.


முசாபர்பூர்

பீகார் மாநிலம் முசாபர்பூரில்  அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதி ஒன்றில் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக  அரசு நடத்தும் தங்குமிடத்தில் பெண்கள் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாக  அதிகாரி ஒருவர் உள்பட 10  கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த தங்கும் விடுதி மூடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட  21 மருத்துவ பரிசோதனை  அறிக்கைகளில், 16 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது  மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முசாபர்பூரில் உள்ள இல்லத்தில் வாழ்ந்த மற்ற பெண்களின் அறிக்கைகள் இன்னும் வெளிவரவில்லை.  

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்  அவரது துயரத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு உள்ளார்   என்றும் மற்றும் வீட்டின் வளாகத்தில் அவர் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளதாக  விசாரணை அதிகாரிகளிடம்  தெரிவித்து உள்ளார்.

இதை தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின்  வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. எக்ஸிக்யூடிவ் மேஜிஸ்ட்ரேட் (கிழக்கு) ப்ரியா ராணி குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்த சம்பவம் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் மற்றும் முன்னாள் துணைத் முதலவர் தேஜாஷ்வி யாதவ், குற்றவாளிகளைக் காப்பாற்ற நிதீஷ் குமார் தலைமையிலான மாநில அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். தங்கும் விடுதியை நடத்திய  என்ஜிஓ உரிமையாளர் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு நெருக்கமாக உள்ளார். மற்றும் தேர்தல்களில் அவருக்கு பிரச்சாரம் செய்தார், என குற்றம்சாட்டி உள்ளார்.

மார்ச் முதல், பீகார்  முசாபர்பூரில் தங்குமிடங்களில்  அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் 40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.  பலர் கருக்கலைப்புகளை கட்டாயப்படுத்தபட்டு உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேஜாஷ்வி யாதவ் கூறி உள்ளார்.

Next Story