திலீப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வாய்ப்பு


திலீப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 23 July 2018 9:41 AM GMT (Updated: 23 July 2018 9:41 AM GMT)

பிரபல மலையால நடிகர் திலீப் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய நடிகையின் மனு மீது கேரள அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. #Dileep

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17–ந் தேதி பிரபல நடிகை காரில் கடத்தி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். நடிகர் திலீப் கடந்த  ஆண்டு (2017) ஜூலை மாதம் 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் சென்ற அக்டோபர் மாதம் 3–ந் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த  நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த மாதம் எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ்  நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது வழக்கை பெண் நீதிபதி  கொண்ட தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.  ஆனால் செஷன்ஸ் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லாததால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து, அதேகோரிக்கையுடன் கேரள உயர் நீதிமன்றத்தை நாடிய அந்த நடிகை, வழக்கு விசாரணையால்  தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே தனது வழக்கை பெண்  நீதிபதி கொண்ட தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என மனு  தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,  தனது நிலைப்பாட்டை அறிவித்த கேரள அரசு,  பெண் நீதிபதி  அடங்கிய தனி  நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. மேலும், நடிகர் திலீப் இந்த வழக்கின் விசாரணையை சீர்குலைக்கு முயற்சிப்பதாகவும் திட்டமிட்டு தாமதப்படுத்துவதாகவும் கூறியது.  

Next Story