தேசிய செய்திகள்

பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. + "||" + Cases like Alwar lynching will take place until cow slaughter stops BJP MLA Raja Singh

பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.

பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.
பசுவதையை தடுக்கும் வரையில் கும்பல் தாக்குதல் நடக்கத்தான் செய்யும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங் பேசியுள்ளார்.

ஜெய்பூர்,


ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு பாதுகாவலர்களால், வீட்டிற்கு மாடுகளை வாங்கி சென்ற அப்பாவி இளைஞர் அக்பர் கானை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கண்டனங்கள் எழுந்துள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசுகையில், “இறைச்சிக்காக பசுக்கள் வெட்டப்படுவதை நிறுத்தும் வரையில் இதுபோன்ற கும்பல் தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். அதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்ட வேண்டும். மீடியா தகவலின்படி உயிரிழந்தவர் பசுக்களை கடத்துபவர்,” என கூறியுள்ளார். அல்வார் தாக்குதல் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே இளைஞர் அக்பர் கான் உயிரிழப்பிற்கு போலீசும் காரணம் என குற்றம் சட்டப்படுகிறது.